×

ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல்

டெல்லி: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்துள்ளது. திகார் சிறைக்கு சென்று 5 பேரிடமும் 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்து செல்லவும் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர். இதையடுத்து சென்னையைச் சேர்ந்த ஜாபர்சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தவும், வாக்குமூலம் பதிவு செய்யவும் அனுமதிக்கக்கோரி டெல்லி சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. திகார் சிறைக்குச் சென்று 5 பேரிடமும் 3 நாட்கள் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறைக்குள் லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை எடுத்துச் செல்லவும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

The post ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Delhi Special Court ,Jaber Sadiq ,Delhi ,Tigar ,Jafar Sadiq ,
× RELATED ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம்...